கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் பாரம்பரிய மருந்துகள்
- kishor s
- Feb 12, 2023
- 1 min read

தற்போதைய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு நம்மில் பலர் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். ஆனால் சிலருக்கே இதனின் பலன் கிடைக்கிறது. பெரும்பாலானோருக்கு உடல் எடை குறையாமல் இருப்பதற்கு காரணம் நம்முடைய உணவு முறையும் உடற்பயிற்சியின்மையும் தான் காரணமாக அமைகிறது.

முதலில் கொலஸ்ட்ரால் எப்படி உருவாகிறது என்பது பற்றிய சிறிய முன்னுரை... பொதுவாக நமது உடலில் HMG CoA reductase என்கிற நொதி (enzyme) தான் கொலஸ்ட்ராலை அதிக அளவில் உற்பத்தி செய்ய காரணமாக அமைகிறது. இதன் விளைவாக நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது, பொதுவாக கெட்ட கொலஸ்ட்ரால் நமது ரத்தத்தில் கரைவதில்லை மாறாக நமது ரத்த நாளங்களில் சிறிது சிறிதாக படிந்து ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துகிறது ஒரு கட்டத்திற்கு மேல் இந்தக் கெட்ட கொலஸ்ட்ரால் நமது இதயத்திலும் படி ஆரம்பிக்கிறது இதன் விளைவாக நமக்கு எளிதில் பக்கவாதம் மற்றும் இதய அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ரத்தத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த HMG CoA reductase என்கிற நொதியை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இந்த நொதியை கட்டுப்படுத்த மருத்துவத்துறையில் "statins" என்று அழைக்கப்படும் மருந்துகளை பயன்படுத்துகிறார்கள்

உதாரணமாக:- simvastatin(zocor), rosuvastatin(crestor), lovastatin(mevacor) ஆகிய மருந்துகள் இந்த நொதியை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் இயற்கை முறைப்படி ரத்தத்தில் உள்ள அளவுக்கதிகமான கொலஸ்ட்ராலை குறைக்க :- மஞ்சளில் குர்குமின் (curcumin) என்கிற இயற்கை வேதி பொருளும், மிளகில் பைபரின் (Piperine) என்கிற இயற்கை வேதி பொருளும், இஞ்சியில் gingerol என்கிற இயற்கை வேதிபொருளும் அதிக அளவில் உள்ளது. மேலே கூறிய இயற்கை வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டவை. அவற்றை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல்நலம் மேம்படுவதுடன் கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் வருகிறது.

Comments