புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை சுவை ஊட்டி அஸ்பார்டேம் (aspartame)
- kishor s
- Jul 16, 2023
- 2 min read

சில நாட்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் aspartame என்கிற செயற்கை சுவையூட்டி (artificial sweetener) புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்கிற அந்த அமைப்பு கொடுத்த ஒரு ரிப்போர்ட் தான்.

அஸ்பார்டேம் என்பது திட நிலையில் (solid state) உள்ள ஒரு செயற்கை சுவையூட்டி. இது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சர்க்கரை விட 200 மடங்கு இனிப்பானது.

இந்த வேதிப்பொருள் பேக்கரியில் சூடுபடுத்தப்படாத உணவுப் (non heated foods) பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது அதுமட்டுமில்லாமல் குளிர்பானங்கள், மருந்து பொருட்கள், சுயிங்கம் மற்றும் டூத் பேஸ்ட்களிலும் இது பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இந்த வேதிப்பொருளை குறைவாக பயன்படுத்தும் பொழுது நிறைய இனிப்புகளை அந்த உணவுப் பொருட்களுக்கு வழங்குவதாலும், விலை மலிவாக இருப்பதாலும் இதை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த வகையான வேதிப்பொருளை பயன்படுத்தும் பொழுது இது எவ்வளவு இனிப்பாக இருந்தாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்துவது இல்லை. இதன் காரணமாகவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த செயற்கை சுவையூட்டி ஒரு இன்றியமையாத பொருளாக அமைந்தது. இந்த வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படுமா என்கிற விவாதம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடந்து வருகிறது. இதன் பற்றிய ஆய்வுகளும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சில நாட்களுக்கு முன்பு ஆராய்ச்சி முடிவுகள் வெளியான, பிறகு ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள் அது என்னவென்றால் இந்த வேதிப்பொருளை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் இருக்கிறது என்பதுதான்.

இந்த வேதிபொருள் நமது வயிற்றுக்குள் சென்று செரிமானம் ஆன பிறகு மூன்று வேதிப்பொருட்களாக உருவெடுக்கிறது. அது என்னவென்றால் மெத்தனால் (methanol), ஃபைனிலாலனைன் (phenylalanine) மற்றும் அஸ்பார்டிக் அமிலம் (aspartic acid) ஆகிய வேதிப்பொருள்கள் தான்.

மூன்றில் மிகவும் ஆபத்தானது மெத்தனால் என்கிற வேதிப்பொருள் தான். இதற்கு காரணம் இந்த மெத்தனால் நமது கல்லீரலால் வெளியேற்றப்படும் பொழுது இது ஃபார்மால்டிஹைட் (formaldehyde) என்கிற வேதிப்பொருள் ஆக உருமாறுகிறது. இந்த வேதிப்பொருளை பற்றி நீங்கள் பலரும் அறிந்திருப்பீர்கள். இது உயிரற்ற உடல்களை பதப்படுத்துவதற்கு பயன்படுகிறது என்பதும் நீங்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. பொதுவாக மெத்தனால் நமது கல்லீரலுக்கு செல்லும் பொழுது formaldehyde என்கிற வேதிப்பொருளாக உருமாறுவதால் நமது கல்லீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது என்கிற அதிர்ச்சிகரமான உண்மையையும் ஆராய்ச்சி முடிவில் வெளிவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வேதிபொருள் என்றால் அது phenylalanine தான். இந்த வேதிப்பொருள் நமது உடம்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சில ஹார்மோன்களான dopamine, serotonin போன்ற வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதை குறைத்து விடுவதாக ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் நமக்கு மன அழுத்தமும் மூளையில் சில பிரச்சனைகளும் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த செயற்கை சுவையூட்டி குழந்தைகளை பெரிதும் பாதிப்பதால் இதை படிக்கும் நீங்கள் பெற்றோராக இருந்தால் தங்கள் குழந்தைகளுக்கு இந்த செயற்கை சுவையூட்டி கலந்த ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொடுக்காமல் இருப்பது உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அமையும்.
இந்த செயற்கை சுவையூட்டி கலந்து இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்கிற கேள்வி உங்களுக்கு எழும்? அதை இப்பொழுது பார்க்கலாம், நீங்கள் வாங்கிய உணவுப் பொருட்களின் பின் இன்க்ரிடியன் லிஸ்டில் "phenylketonurics:- contains phenylalanine" என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
சு. கிஷோர்
முதுநிலை வேதியியல்
GATE
References :-
Nutrients. 2021 Jun; 13(6): 1957. Published online 2021 Jun 7.
doi: 10.3390/nu13061957
コメント