google.com, pub-1016508461547365, DIRECT, f08c47fec0942fa0
top of page
Search

ஹேர் டை (Hair dye) பற்றிய உண்மை தகவல்கள் #Ammonia #PPD



நமது அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் கருமையான தலைமுடிக்கு தனி சிறப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் தலைமுடி பற்றிய பிரச்சனை 90 சதவீதம் பேருக்கு உள்ளது. இளமை காலத்தில் தலைமுடி நரைத்தல், அதிகமான தலைமுடி உதிர்தல் ஆகிய காரணங்களே பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் சரியான வாழ்க்கை முறை இல்லாதது தான், குறிப்பாக கலப்படம் நிறைந்த உணவுகளும் தரமற்ற உணவுகள் தான் பெரும்பாலான காரணமாக இருக்கிறது. இப்பொழுது தலைமுடி என்றால் என்ன என்பதைப் பற்றி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்போம். தலைமுடி கேரட்டின் (keratin) என்கிற புரதத்தால் ஆனது இந்தப் புரதம் (proteins) 18 அமினோ அமிலங்களால் (amino acids) ஆனவை. அதிலும் சிஸ்டின் (cystine) என்கிற அமினோ அமிலம் பெரும் பங்கு வகிக்கிறது இந்த அமினோ அமிலம் முடிக்கு நல்ல பலத்தை தருகிறது. தலைமுடி கருமையாக இருப்பதற்கு மெலனின்(melanin) என்கிற வேதிப்பொருள் நமது முடிகளில் இயற்கையாக இருப்பதுதான் காரணமாக இருக்கிறது, நரைத்த தலைமுடி உள்ளவர்களுக்கு மெலனின் எனப்படும் வேதிப்பொருள் அந்த முடிகளில் குறைவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நரைத்த தலைமுடியை மறைப்பதற்காக ஹேர் டையை பயன்படுத்துகிறோம். இந்த ஹேர் டையில் உள்ள வேதிப்பொருட்கள் அதனால் ஏற்படும் சில பக்க விளைவுகளை பற்றி வேதியியல் ரீதியாக இப்பொழுது பார்ப்போம்.







ஹேர் டையில்:-

பாரா ஃபைனிலீன் டையாமின் (PPD) (para phenylene diamine), ஹைட்ரஜன் பெராக்சைடு (hydrogen peroxide), அம்மோனியா (ammonia), எத்தனோலாமைன் (ethanolamine), பாரா அமினோபீனால் ( para amino phenol) ஆகிய வேதிப்பொருட்கள் பெரும்பாலான ஹேர் டையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.



PPD
PPD



இப்பொழுது மேலே குறிப்பிட்ட வேதி பொருட்களின் நன்மை தீமைகள் பற்றி ஒவ்வொன்றாக காண்போம்.


அமோனியா:-

இந்த காலகட்டத்தில் ஹேர் டைகளில் "நோ அம்மோனியா" என்கிற விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். அப்படி என்ன அம்மோனியாவின் செயல்பாடுகள் மற்றும் தீமைகள்? என்பது பற்றிய கேள்வி உங்களுக்கு வரும்.

அது என்னவென்றால் பொதுவாக ஹேர் டைகளில் இருக்கும் வேதிப்பொருட்கள் வினை புரிய காரத்தன்மை (alkaline PH) தேவைப்படுகிறது. அந்த காரத்தன்மையை அதிகரிப்பதற்காக தான் அம்மோனியா கலக்கப்படுகிறது, அது மட்டும் இல்லாமல், அம்மோனியா ஹேர் டைகளில் இருக்கும் சாயத்தை முடியில் நன்றாக ஒட்ட வைக்க பயன்படுகிறது.

இந்த அமோனியா நமது தோளில் எளிதில் ஊடுருவி ரத்தத்தில் கலைக்கிறது, இதனால் உடல் உபாதைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் அம்மோனியா நமது முடிகளில் இயற்கையாக இருக்கும் மெலனின்(melanin) என்கிற முடியை கருமையாக வைத்திருக்கும் வேதிப் பொருளை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அம்மோனியாவுக்கு மாற்றாக எத்தனோலாமைன் (ethanolamine) என்கிற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது இதுவும் அமோனியா செய்யும் வேலைகளை செய்யும் ஆற்றல் கொண்டவை ஆனால் பக்க விளைவுகள் இல்லை என்பதும் ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.




பாரா ஃபைனிலீன் டையாமின் (PPD) (para phenylene diamine) எனப்படும் இரசாயனமே முடிகளில் கருமையான நிறத்தைப் தோற்றுவிக்க பயன்படுகிறது.

இந்த வேதிப் பொருளும் ஒரு சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.


ஹேர் டையை பாதுகாப்பான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய விளக்கத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்....

 
 
 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Kishor S
Kishor S
Jul 22, 2023
Rated 5 out of 5 stars.

Super

Like

8072956942

©2021 by STAR CHEMISTRY TAMIL. Proudly created with Wix.com

bottom of page