மூளைக்கு புத்துணர்வு கொடுக்கும் caffeine(காபி)
- kishor s
- Jul 13, 2022
- 1 min read

நமது உடலில் உள்ள செல்களுக்கு சக்தியை தருவது அடினோசின் ட்ரைபாஸ்பேட்(ATP), இந்த வேதிப்பொருள் நம் உடலில் சக்தி தேவைப்படும் பொழுது அது அடினோசின் மற்றும் ட்ரைபாஸ்பேட் ஆக உடைந்து சக்தியை
தரும். இரத்தத்தில் இருக்கும் இந்த அடினோசின் நமது மூளையில் உள்ள நியூரான்களில் உள்ள receptor என்ற பகுதியில் சேர்த்துக்கொள்ளும், அப்போது தான் மூளையில் தகவல் பரிமாற்றம் குறைந்து உடலில் சோர்வு ஏற்படுகிறது. இந்த அடினோசின் நமது மூளையில் சில மணி நேரங்களில் இயற்கையாகவே கரைந்து போகும், அதன்பிறகே மூளையில் புத்துணர்வு பெற்று சோர்வு நீங்கும்.

நாம் குடிக்கும் காபியில் caffeine என்ற வேதிப்பொருள் உள்ளது. அடினோசின் உருவமும் caffeine உருவமும் கிட்டதிட்ட ஒன்று தான். உருவ ஒற்றுமை
காரணமாக அடினோசின்க்கு பதிலாக caffeine சென்று மூளையில் உள்ள நியூரான்களில் சேர்ந்து கொண்டு அடினோசினால் ஏற்படக்கூடிய சோர்வை நீக்கி சில மணி நேரங்கள் புத்துணர்வு கொடுக்கும், நியூரான்களில் caffeine

கரைந்த பிறகு மீண்டும் சோர்வு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் காபி குடிக்கும் பொழுது மூளையில் உள்ள நியூரான்கள் அதிக எண்ணிக்கையில் receptor களை உருவாகும். இதன் காரணமாக தான் மூளையில் உள்ள நியூரான்கள் தூண்டப்பட்டு நாம் காபி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆகிறோம்.
Comments