பொடுகு பிரச்சனையை தீர்க்க...
- kishor s
- Jul 16, 2023
- 1 min read

பொடுகு என்பது நமது தலையில் ஈரப்பதம் இல்லாமல் மேல் புறத்தோல் உடைந்து கொட்டுவதே பொடுகு என்று அழைக்கப்படுகிறது. சமீபகாலமாக பெரும்பாலானோருக்கு இந்த பொடுகு பிரச்சனை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக நமது தலையில் ஈரப்பதம் இல்லாததே காரணமாக அமைகிறது. தலையில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க தினமும் தேங்காய் எண்ணெயை தடவுவதால் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது.

மருத்துவத்துறையில் பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு சாலிசிலிக் அமிலம் (salicylic acid) என்கிற வேதிப்பொருளை பயன்படுத்துகிறார்கள். இதை கெரடோலிடிக் ஏஜென்ட் (keratolytic agent) என்றும் அழைக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் anti dandruff ஷாம்புகளில் இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்துவதால் நமது தோளில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி நமது தோளில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

Comments