நான்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து
- kishor s
- Feb 9, 2023
- 1 min read

தற்போதைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு சுவையாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் நல்ல வடிவமும் கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் உணவுகளையே நம் மனம் உண்ண விரும்புகிறது. அந்த வரிசையில் நமது சமையல் அறைகளில் பயன்படுத்தப்படும் நான் ஸ்டிக் (non stick) பாத்திரங்களை பற்றிய சுவாரசியமான சில தகவல்களை இப்பொழுது பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் சமைக்கத் தெரியாத அல்லது புதிதாக சமைக்க பழகியவர்களுக்கு ஒரு தோசை முழுமையாக சுடுவதற்கு தோசை கல்லுடன் பெரும் போராட்டமே நடக்கும் ஆனால் தற்பொழுது இந்தப் பிரச்சனை நீங்கி தாமரை இலையில் உள்ள நீர் போல தோசையை ஒட்டி ஒட்டாமல் சமைக்க பாலிடெட்ராபுளோரோஎத்திலீன் (polytetrafluoroethene) என்கிற வேதிப்பொருள் தடவப்பட்ட தோசை கற்கள் பயன்படுத்தப்படுகிறது.

ராய் ஜே. பிளங்கட் (ஜூன் 26, 1910 - மே 12, 1994) ஒரு அமெரிக்க வேதியியலாளர் ஆவார் . அவர் 1938 இல் டெஃப்ளான் என்று அழைக்கப்படும் பாலிடெட்ராபுளோரோஎத்திலீனை (PTFE) குளிர்சாதன பயன்பாட்டிற்கான வேதிப்பொருளை உருவாக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக இந்த வேதிப்பொருளை கண்டுபிடித்தார்.

இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களை குறைந்த வெப்ப நிலையில் பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் 260 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் செல்லும் பொழுது இந்த பாத்திரங்களில் தடவப்பட்ட வேதிப்பொருள் சிறிது சிறிதாக உருகி நமது உணவில் கலந்து அதை உட்கொள்ளும் நமக்கு புற்றுநோய் போன்ற நீண்டகால பாதிப்புகளை உருவாக்கக்கூடும் என ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது. ஆகையால் இந்த வகையான நான்ஸ்டிக் பாத்திரங்களின் உபயோகத்தை குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.
Comentarios