கிருமிகளை அழிக்க உதவும் சில்வர்
- kishor s
- Apr 25, 2023
- 1 min read

நாம் அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய கவர்ச்சியான ஆபரணம் தான் வெள்ளி. ஆபரணங்களில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் வெள்ளிக்கு தனி சிறப்பிடம் உண்டு, உதாரணமாக மருத்துவம் மற்றும் சினிமா துறைகளில் வெள்ளியால் ஆன வேதிப்பொருட்களின் பயன்கள் ஏராளம். வெள்ளியால் ஆன பொருட்களுக்கு ஆன்டிபாக்டீரியல் தன்மை உள்ளதால் மருத்துவத் துறையில் சில மருத்துவ உபகரணங்களும் மற்றும் மருந்து பொருட்களுக்கு சிலவற்றில் வெள்ளியை பயன்படுத்தி செய்யப்பட்ட பொருட்களாக இருக்கும்.

வெள்ளி அதிகமான மின்சாரத்தை கடத்தும் ஆற்றல் கொண்டவை அதனால் வெள்ளியால் ஆன நூல் இதழை கொண்டு செய்யப்பட்ட கையுரையை நவீன தொடு திரையை உபயோகிக்க பயன்படுத்தப்படுகிறார்கள்.

வெள்ளியின் மீது வெளிச்சம் பட்டவுடன் வினை புரிவதால் இதை போட்டோ எடுக்க பயன்படும் பிலிம் ரோல் மற்றும் பிரிண்டிங் டெக்னாலஜியில் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளியால் ஆன நானோ துகள்களில் செய்யப்பட்ட உடைகளை அணிவதால் நமது சருமங்கள் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது.
Comments