தங்கம் மற்றும் வெள்ளி பற்றிய வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள்
- kishor s
- Jun 5, 2022
- 1 min read

"தங்கம்" என்கிற வார்த்தைக்கே அவ்வளவு ஈர்ப்பு மக்களிடம் இருக்கும் நிலையில் அந்தத் தங்கத்தைப் பற்றி அறிவியல் பூர்வமான சில சிறப்புகளை இந்த பதிவில் காண்போம்.
தங்கம் மற்றும் வெள்ளியின் தனித்தன்மைகள்:-
இந்த உலோகங்களில் முதல் சிறப்பு என்று பார்த்தால் இது எந்த பொருளுடனும் வினை புரியாது ஆங்கிலத்தில் நோபல் மெட்டல் ( noble metal) என்று அழைப்பார்கள். இரும்பை உதாரணமாக எடுத்துக் கொண்டால் இது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடனும் நீருடனும் வினைபுரிந்து அது தனது பலத்தை இழக்க( corrosion) ஆரம்பிக்கும். ஆனால் தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்கள் அவ்வளவு எளிதில் காற்றின் உடனும் அல்லது மற்ற வேதிப்பொருட்கள் உடனும் வினை புரிவதில்லை இதனால்தான் இது பல யுகங்கள் கடந்து தாங்கி நிற்கிறது. இப்படி தனித்து நிற்பதால் தான் இதற்கு நோபல் மெட்டல்ஸ் என்ற பெயர் வந்தது.

அடுத்த சிறப்பு இந்த தங்கம் மற்றும் வெள்ளி உடலில் உள்ள வெப்பத்தை மிக வேகமாக கடத்தக் கூடிய ஆற்றல் கொண்டது ( வெள்ளி தங்கத்தை விட மிக வேகமாக வெப்பம் மற்றும் மின் சாரத்தை கடத்தும் ஆற்றல் கொண்டவை ) இதனால் உடல் குளிர்ச்சி அடையும், பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் உடலில் உள்ள வெப்பம் அதிகரிப்பதால் தான். அதனால் தான் நமது முன்னோர்கள் இந்த உலகங்களை ஆபரணமாக செய்து அணிவித்து இதன் மூலம் உடலை குளிர்ச்சி அடைய செய்தார்கள்.
தங்கம் மற்ற உலோகங்களை காட்டிலும் அடர்த்தி அதிகமான ஒரு உலோகம், இதனால் தங்கத்தில் எக்ஸ்ரே போன்ற மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் ஊடுருவ முடியாது.
அடுத்தபடியாக தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களின் நிறம் அதிக அளவில் மக்களால் கவரப்படுகிறது.
Comments