பாதுகாப்பான முறையில் ஹேர் டை (Hair dye) பயன்படுத்தும் வழிமுறைகள்
- kishor s
- Jul 3, 2022
- 1 min read

உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின்(Food and drug administration) வழிமுறைகளின் படி ஒருவர் ஹேர் டையை பாதுகாப்பான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஹேர் டையை தலையில் அடிப்பதற்கு முன்னால் முழங்கைக்கு கீழே சிறிதளவு தோலில் ஹேர் டையை தடவிய ( patch test ) பிறகு இதை 48 மணி வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும் பிறகு அதை கழுவ வேண்டும் இப்படி கழுவியப் பிறகு உங்கள் தோளில் ஏதேனும் காயங்களோ அல்லது மாற்றங்கள் இல்லை என்றால் அது உங்களுக்கு பாதுகாப்பான ஹேர் டை என கருத வேண்டும்.

பாரா ஃபைனிலீன் டையாமின் (PPD) (para phenylene diamine) எனப்படும் வேதிப்பொருள் பெரும்பாலான ஹேர் டை யில் கலக்கப்படுகிறது இதனால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது ஆகையால் இந்த வேதிப்பொருளால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் ஹேர் டை பாக்கெட்டுகளில் உள்ள இன்கிரிடியன்ஸ் லிஸ்ட்டை பார்த்த பிறகு அதை தவிர்க்க வேண்டும்.
ஹேர் டை பயன்படுத்தும் பொழுது உங்களில் கண்ணில் படாதவாறு இருத்தல் வேண்டும் ஏனென்றால் இதில் இருக்கும் வேதிப்பொருளால் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.
ஹேர் டையை வெறும் கைகளால் தொடாமல் கையுறை அணிந்த பின் தொடுவது நல்லது.
ஹேர் டையை தலையில் தடவிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் தண்ணீரால் கழுவி விட வேண்டும்.
உங்கள் தலையில் காயங்கள் இருந்தால் ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்!
Reference :
https://www.fda.gov/cosmetics/cosmetic-products/hair-dyes#checklist
;
;
Comentarios