வேப்பமரத்தின் இலைகளுக்கு இவ்வளவு மதிப்பா?
- kishor s
- Feb 12, 2023
- 1 min read
Updated: Feb 13, 2023

பொதுவாக பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் காற்றில் அதிகம் பரவுவதை விட மனிதர்கள் மூலம் வேகமாக பரவும்.
இப்பொழுது வேப்பிலையில் உள்ள அறிவியலைப் பற்றி சற்று விரிவாக காண்போம்.
வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் ஆசாதிராச்டா இன்டிகா (Azadirachta Indica ). வேப்ப மர இலையில் அதிக அளவில் Azadirachtin, Nimbin, Nimbidin ஆகிய இயற்கை வேதிப்பொருட்கள் உள்ளது. வேப்பமரத்தின் கசப்பான சுவைக்கு இதுவே காரணம்.

இந்த வகை வேதிப் பொருட்களால் ஏற்படும் மருத்துவ பயன்கள்:

வேப்பிலை பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்து அவை மீண்டும் வளராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
வேப்பிலைக்கு anti-fungal தன்மை உள்ளதால் உடலில் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும், தலையில் உள்ள பொடுகு களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது.
வேப்பமரம் இருக்கும் இடத்தில் காற்று தூய்மை அடைகிறது, அதுமட்டுமில்லாமல் மலேரியாவை ஏற்படுத்தக்கூடிய கொசுக்களையும் அழிக்கும் தன்மை கொண்டது.
வேப்பிலை சரும நோய்களை குணப்படுத்தி அவை மீண்டும் வராமல் பாதுகாக்கும் தன்மை கொண்டவை.
வேப்பிலை செயற்கையாக ஏற்படும் வெட்டு காயங்களில் செப்டிக் ஆகாமல் தடுத்து விரைவில் குணப்படுத்தும். அம்மை நோய்களை குணப்படுத்தும் ஆற்றலும் வேப்பிலைக்கு உண்டு. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் வேப்பிலைக்கு சிறப்பிடம் உண்டு. அதுமட்டுமில்லாமல் புற்றுநோய் கட்டிகள், குடல் புழுக்கள், சிறுநீரக தொற்று ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கும். வேப்பிலை விவசாயிகளுக்கு பூச்சி கொல்லியாக பயன்படுகிறது.
"இவ்வளவு பாரம்பரியமிக்க வேப்பமரத்தை இனி வரும் காலங்களில் அழியாமல் பாதுகாத்து அதில் உள்ள அறிவியலையும் உணர்ந்து, நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வோம்"!
Comments