மெத்தில் மெர்குரியும் (methyl mercury) மீனும்
- kishor s
- Oct 10, 2022
- 1 min read
(இந்தப் பதிவு உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மட்டுமே யாரையும் காயப்படுத்துவதற்காக அல்ல)

மினமாட்டா என்கிற கடல் பகுதி ஜப்பானில் உள்ளது. இங்கு 1956 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள் பலர் செயலற்று போனார்கள் இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அந்த கடல் பகுதியில் இருக்கும் மீன்களை இந்தப் பகுதி மக்கள் உண்டதால் தான் ஏற்பட்டது என்று ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. அதற்கு காரணமான வேதிப்பொருள்தான் பாதரசம் (mercury).

பொதுவாக பாதரசம் தெர்மாமீட்டர் செய்வதற்கும் சில மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கும், தங்க சுரங்கங்களில் தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரிப்பதற்கும், சில பூச்சிக்கொல்லி மருந்து செய்வதற்கும் பாதரசம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பாதரசங்கள், தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுகளாக நீர் நிலைகளில் கலக்கப்படுகிறது. இந்தப் பாதரசம் நீர் நிலைகளில் கலந்த பின்னர் சில நுண்ணுயிரிகளால் மெத்தில் மெர்குரியாக மாறுகிறது. இது சாதாரண பாதரசத்தை விட பல மடங்கு விஷம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மெத்தில் மெர்க்குரி கொழுப்பில் (lipid soluble) அதிகம் கரையக்கூடியவை. இதன் காரணமாக நீர் நிலைகளில் வாழும் மீன்களில் உடம்பில் எளிதில் கரைந்து விடுகிறது. மீன்களின் மூலமாக நமது உடம்பிலும் சிறிது சிறிதாக இந்த மெத்தில் மெர்க்குரி படிய ஆரம்பிக்கிறது இதனால் மத்திய நரம்பு மண்டலத்தை பெரிதும் பாதிக்கும் என்று ஆராய்ச்சி முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனால் நீங்கள் வாங்கும் மீன்கள் தரமானதா என்று அறிந்த பின்னர் வாங்குவது சிறந்தது. பணம் கொடுத்து மீன்களை வாங்கும் உங்களுக்கு மீன்கள் எந்த சுற்று சூழலில் இருந்து கொண்டு வரப்படுகிறது என்பதை அறிய உங்களுக்கு உரிமை உண்டு.
"வருமுன் காப்பதே சிறந்தது"
"Prevention is better than cure"
Reference:-
Lavoie, R.A., Bouffard, A., Maranger, R. et al. Mercury transport and human exposure from global marine fisheries. Sci Rep 8, 6705 (2018).
Comments