மனிதனும் மரமும்
- kishor s
- Jan 1, 2023
- 1 min read

மனிதர்களுக்கும் மரங்களுக்கும் ஒரு இன்றியமையாத தொடர்பு உள்ளது, இதற்கு காரணமானது ஒரு வேதியல் வினைதான், அதுதான் ஒளிச்சேர்க்கை (photosynthesis).

மரங்கள் நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை தனக்கான உணவாக தயாரித்துக் கொண்டு ஆக்ஸிஜனையும் வெளியிடுகிறது. நமது பூமி வெப்பமடைவதற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு காரணமாக அமைகிறது. பொதுவாக சூரியனிலிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்கள் பூமியின் மீது பட்டு பிறகு வளிமண்டலத்திற்கு திரும்பச் செல்லும். இப்படி செல்வதால் பூமியின் வெப்பநிலை சமமாக இருக்கும். ஆனால் கார்பன் டை ஆக்சைடு வாயு வளிமண்டலத்தில் அதிகமானால் பூமியிலிருந்து வளிமண்டலத்திற்கு செல்லவிருக்கும் அகச்சிவப்பு கதிர்களை மீண்டும் தடுத்து பூமிக்கு திருப்பி அனுப்பி விடுகிறது. இதன் காரணமாகவே பூமியின் வெப்பநிலை உயர்கிறது,

இதன் விளைவாக பருவநிலை மாற்றங்கள், பனிமலை உருகி கடல் மட்டம் உயர்கிறது. பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிப்பு அடைவது மட்டுமில்லாமல் நோய்கள் தாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னொரு காலத்தில் மனிதர்களும் மரங்களும் சரியான விகிதத்தில் இருந்தார்கள், ஆனால் தற்பொழுது மரங்களை விட மனிதர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த விகிதத்தை சரி செய்ய வேண்டுமென்றால் மரங்களை நம் அழியாமல் பாதுகாப்பதுடன் புதிய மரங்களை நடுவது தான் சிறந்த தீர்வாக அமையும்.

கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட தற்பொழுது பருவநிலை சீராகிவருகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. இதற்குக் காரணம் கொரோனா காலத்தில் தொழிற்சாலைகளும், வாகனங்களும் முடங்கியதால் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றம் முற்றிலும் குறைந்தது. இந்த காலத்தில் இயற்கை தன்னைத்தானே மீட்டு எடுத்துக் கொண்டது என்றே கூறலாம். மனிதர்கள் இல்லாமல் கூட மரங்களால் வளர முடியும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது என்பதை நாம் மரத்தின் மகத்துவத்தை உணர்ந்து இன்று புதிய வருடத்தில் இயற்கையை பாதுகாக்க உங்களால் முடிந்த சில சிறிய செயல்களில் ஈடுபட வேண்டும் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாசகர்களாகிய உங்களுக்கு இந்த வருடத்தில் அனைத்து வளங்களும் நிறைவாக கிடைத்திட "ஸ்டார் கெமிஸ்ட்ரியின்" சார்பாக அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

உங்களது ஆதரவால் "ஸ்டார் கெமிஸ்ட்ரி" வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதில் பெருமை கொள்கிறது!!!
Comments