மஞ்சள் பற்றிய வியப்பூட்டும் வேதியியல் தகவல்கள்
- kishor s
- Jun 7, 2022
- 1 min read

மஞ்சள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு வரம் என்றே கூறலாம். இயற்கையாக மஞ்சளில் குர்க்குமின்(curcumin) என்ற வேதிப்பொருள் உள்ளது.

இதில் இயற்கையாக பீனால்(phenol) உள்ளது. இப்படி இயற்கையாக பீனால் (natural phenol) எந்த ஒரு இயற்கை பொருளில் இருந்தாலும். அது ஆன்டிஆக்சிடன்ட் (anti-oxidant), ஆன்டி-பாக்டீரியல் (anti-bacterial), anti-viral ஏஜென்டாக செயல்படும். மேலும் இந்த வேதிப்பொருள் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை(uv-rays) தடுக்கும் தன்மை கொண்டது, இதனால் நம் உடம்பை தோல் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது, அதனால்தான் பெண்கள் மஞ்சளை குளிப்பதற்கு பயன்படுத்தினார்கள். மேலும் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்துவிடும்.
நமக்கு சளி மற்றும் காய்ச்சல் வருவதற்கு காரணமும் ஒருவகை கிருமி தான். சளிப் பிடித்தவர்கள் தினமும் மஞ்சளுடன் மிளகை சேர்த்து உட்கொண்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் நமது இரத்தத்தில் எளிதில் கலப்பதில்லை. இதன் காரணமாகவே, மஞ்சளுடன் மிளகு சேர்க்கும் பொழுது அது நமது ரத்தத்தில் எளிதில் கலந்து மஞ்சளின் நன்மைகளை அதிகரிக்கச்செய்யும். மேலும் மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து உட்கொண்டு வருபவர்கள் வாழ்நாளில் கேன்சர்(cancer) என்பதை நினைத்துக்கூட பார்க்க வேண்டாம். மஞ்சள் நீரை தினமும் வீடுகளில் தெளிப்பதால் சில விஷ கிருமிகளிடமிருந்து வீட்டை பாதுகாக்கிறது. மஞ்சளை அளவுக்கு மீறி உட்கொண்டால் உடம்பில் வைட்டமின் ஏ உருவாவதை தடுக்கிறது இதனால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் மஞ்சளை அளவுடன் உட்கொள்வது சிறந்தது.
Comments