தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சல்ஃபர் (கந்தகம்) #sulfer
- kishor s
- Jun 8, 2022
- 1 min read
Updated: Jun 12, 2022

நமது அன்றாட வாழ்வில் காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நம்மை தெரிந்தோ தெரியாமலோ வேதியியலே இயக்குகிறது. அவ்வளவு ஏன் நமது உடல் முழுவதும் வேதியியல் தனிமங்களால் ஆனவையே ஆகும். அப்படியிருக்கையில் மனிதனின் உடலில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு தனிமங்களுக்கு தனித்தனி வேலைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில் சல்ஃபரால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....
சல்ஃபர் மனித உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று. நமது உடலில் அதிகமாக காணப்படும் தனிமங்களில் சல்ஃபர் மூன்றாவது தனிமம் ஆகும். 70 கிலோ எடையுள்ள மனித உடலில் 140 கிராம் சல்ஃபர் உள்ளது என்பது ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.
சல்ஃபர் நமது உடலில் இன்சுலின் உற்பத்தி செய்வதற்கு உதவி செய்கிறது. நமது உடலில் போதுமான அளவு சல்ஃபர் இல்லையென்றால் இன்சுலின் உற்பத்தியில் தடை ஏற்பட்டு ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிக்க வழிவகை செய்கிறது.
சல்ஃபர் உடலிலுள்ள செல்களை சுத்தம் செய்கிறது.
சல்ஃபர் நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய தசைகளை உருவாக்குகிறது இதனால் இருதயம், ரத்த நாளங்கள், மற்றும் மூட்டு பகுதிகளில் உள்ள தசைகள் பலம் பெறும்.

சல்ஃபர் நமது உடலில் உள்ளதோல்களை அழகாக வைத்திருப்பதுடன் தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கொலாஜன்( collagen) உற்பத்தியை சல்ஃபர் அதிகரிக்க செய்கிறது இதனால் நமது தோலில் உள்ள காயங்களை குணப்படுத்துவதுடன் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சல்ஃபர் செரிமான சக்தியை அதிகரிப்பதால் அஜீரணக்கோளாறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
சல்ஃபர் உடலில் உள்ள என்சைம்களை(enzyme) நன்கு இயங்கச் செய்கிறது.
சல்ஃபர் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
சல்ஃபர் உடலில் கட்டிகள் உருவாகாமல் இருக்க உதவுகிறது.

சல்ஃபர் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்:-
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு காலிஃப்ளவர், முட்டைகோஸ், முள்ளங்கி மற்றும் முட்டை ஆகியவற்றில் சல்ஃபர் நிறைந்து காணப்படுகிறது.

சல்ஃபர் அதிகம் உள்ள அமினோ அமிலங்கள் :-
சிஸ்டின்(cystein) மற்றும் மெத்தியோனின்(methionine)
சல்ஃபர் அதிகம் உள்ள விட்டமின்கள்:-
Biotin, pantothenic acid, thiamine, lipoic acid.
மேற்கூறிய உணவுப் பொருட்களை தினமும் உண்பதால் சல்ஃபரால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் முழுமையாகப் பெறலாம்.
Comments