மிளகில்(pepper) உள்ள மருத்துவம்
- kishor s

- Jun 19, 2022
- 1 min read

மிளகு எல்லோரது வீட்டிலும் எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு நறுமண பொருள். இது உருவத்தில் தான் சிறியது என்றாலும் இதனின் மருத்துவப் பயன்கள் மிகவும் பெரிது.
மிளகில் பைப்பரின்(piperine) என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இந்த வேதிப் பொருளால் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது என்பதைப்பற்றி பார்ப்போம்.

மிளகு செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, பசியை நன்கு தூண்டி பசியின்மையை விரட்டுகிறது. எளிதில் செரிக்க இயலாத பல அசைவ உணவுகளை மிளகுப் பொடியுடன் சேர்த்து சாப்பிடுவதினால் அந்த உணவு எளிதில் செரித்து விடுகிறது. மிளகு ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடுகிறது இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல், இருதய அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஆகவே, அசைவ உணவு அதிகமாக உட்கொள்பவர்களுக்கு மிளகை விட அருமருந்து வேறு எதுவுமில்லை.
மிளகு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் மிளகை நெய்யுடன் சேர்த்து பல சர்ம நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இது வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி மூளைக்கும் உடலுக்கும் உள்ள தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
மிளகு வயிற்றில் வளரும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் புழுக்களை முற்றிலுமாக கொள்கிறது.
தினந்தோறும் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை எல்லாம் வெளியேற்றாமல் உடலிலேயே உறிஞ்சிக்கொள்ள(absorption of vitamins and minerals to our body) பெரிதும் பயன்படுகிறது. தினமும் 2 முதல் 3 மிளகை உட்கொண்டு வந்தால் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றத்தை உணர முடியும்.



























































Comments