பட்டாசின் வண்ணங்களுக்கு காரணமான வேதிப்பொருட்கள்
- kishor s
- Oct 23, 2022
- 1 min read
Updated: Nov 11, 2023

தீபாவளி நெருங்கும் இத்தருணத்தில் பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒன்று பட்டாசு வெடிப்பது.வானத்தில் பல வர்ணங்களில் கோலமிட்டு, பூ பூவாய் வந்து, விசில் போல ஒலி எழுப்பியும், படபடவென வெடித்து சிதறும் பட்டாசு வானில் நிகழ்த்தும் மாயாஜாலத்தை கண்டு மயங்காத ஆட்களே இல்லை!!
மேலே விவரித்த நிகழ்வுகளுக்கு காரணமான வேதிப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
விசில் ( whistling sound) போல சத்தமிடும் பட்டாசுகளில் பொட்டாசியம் பென்சோயேட் ( potassium benzoate) சோடியம் பென்சோயேட் (sodium benzoate) ஆகிய வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பட பட வென(crackling sound) சத்தம் வரும் பட்டாசுகளில் Magnalium(alloy of magnesium and aluminium) என்ற வேதிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

பச்சை நிறத்தில் வெடிக்கும் பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் (barium nitrate) பயன்படுத்தப்படுகிறது.

சிவப்பு நிறத்தில் வெடிக்கும் பட்டாசுகளில் ஸ்ட்ரோண்டியம் நைட்ரேட் (strontium nitrate) பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளை அல்லது சில்வர் நிறத்தில் வெடிக்கும் பட்டாசுகளில் அலுமினியம் (aluminium) மற்றும் டைட்டானியம் (titanium) பயன்படுத்தப்படுகிறது.

கோல்டன் எல்லோ (golden yellow) நிறத்தில் பூ பூவாய் வரும் பட்டாசுகளில் இரும்புத் துகள்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஊதா நிறத்தில் வெடிக்கும் பட்டாசுகளில் காப்பர் உப்புகள் (copper salts) பயன்படுத்தப்படுகின்றன.

தீபாவளி திருநாளில் இருள் நீங்கி இந்த பட்டாசுகளை போலவே நமது வாழ்க்கையும் வண்ணமயமாகவும் ஒளிமயமாக இருந்திட வாசகர்கள் அனைவருக்கும் "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்".
Happy and safe Deepavali!!!
என்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்ட....
சு.கிஷோர்
முதுநிலை வேதியியல்
Comentarios