பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் உள்ள ஆபத்து (bisphenol A)
- kishor s
- Dec 25, 2022
- 1 min read

வளர்ந்து வரும் இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நீடித்து நிற்கும் தன்மையும் அதிகமான உற்பத்தியும் தான் இதற்கு காரணமாக அமைகிறது. பிளாஸ்டிக் பல வகைகளில் நமது அன்றாட வாழ்விற்கு உதவி செய்தாலும் இயற்கைக்கும் நமது உடல் நலத்திற்கும் சற்று பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் நாம் இதை சரியான முறையில் பயன்படுத்தாத பொழுது தான் ஏற்படுகிறது.

பொதுவாக நம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், உணவுகள் அடைக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பாலி கார்பனேட் (polycarbonate) என்கிற பிளாஸ்டிக் வகையை சார்ந்தவை. இந்த வகையான பிளாஸ்டிக் பொருள் 70 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் அதிகரிக்கும் பொழுது அல்லது சூரிய ஒளி படும் பொழுது இந்த பிளாஸ்டிக் வகை பாலி கார்பனேட்டிலிருந்து bisphenol Aவாக உருமாறுகிறது.


இந்த வேதிப்பொருள் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக தண்ணீர் மற்றும் உணவு பொருட்களில் கரைக்கிறது, இந்த அபாயகரமான வேதிப்பொருளை நம் உணவு மூலம் உட்கொளும் பொழுது புற்றுநோய் மற்றும் உடலில் உள்ள சில ஹார்மோன்களை பாதிக்கும் தன்மையை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் சூடான தண்ணீரை ஊற்றுவது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. தண்ணீர் குடிப்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தாமல் சில்வர் பாட்டில்களை பயன்படுத்துவது சிறந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த நேரிட்டால் அதை வெப்பமடையாமலும் சூரிய ஒளி அதன் மீது படாமல் பார்த்துக் கொள்வது நலம்.
Comments