மாமர (Mango tree) இலையில் உள்ள அறிவியல்: ஆன்மீகமும் அறிவியலும்
- kishor s
- Nov 5, 2021
- 1 min read
Updated: Jun 5, 2022

பொதுவாக விசேஷ நாட்களில் வீடுகளிலும் ஆலயங்களிலும் வாசலில் முதலில் கட்டுவதில் மா இலை தோரணம். இந்த உலகில் நிறைய மரங்கள் இருந்தாலும் மாமர இலைகளுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? என்ற கேள்வி உங்களுக்கு எழும், ஆன்மீக ரீதியாக பல விளக்கங்கள் இருந்தாலும் அறிவியல் ரீதியான காரணங்களை பதிவில் காண்போம். மா மரத்தின் அறிவியல் பெயர் mangifera indica. மா மரத்தின் இலையில் mangiferin என்ற இயற்கை வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இந்த வேதிப்பொருள் பாலிபீனால் (polyphenol) என்ற வகையை சேர்ந்தது.

பொதுவாக இந்த வகை வேதிப்பொருள் ஆன்டிபாக்டீரியல் (anti bacterial), ஆன்டி-வைரல் (anti viral), ஆன்ட்டி ஆக்சிடென்ட்(anti oxidant) ஆகிய தன்மைகளை இயற்கையாக கொண்டிருக்கும். இதன் விளைவாக மாமர இலை இருக்கும் இடத்தில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அறவே நெருங்க விடாது. மாமர இலைகளுக்கு ஆன்டிஆக்சிடென்ட் தன்மை அதிகம் உள்ளதால் சரும நோய்கள் வராமலும், தோலிலுள்ள சுருக்கங்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் மற்றும் சக்கரை வியாதிகளை தீர்க்கும் ஆற்றலும் மாமர இலைகளுக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் தேள், பூரான், பாம்பு மற்றும் விஷ பூச்சி கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. செயற்கையாக ஏற்படும் காயங்களுக்கு நல்ல மருந்தாக மா இலை பயன்படுகிறது. மாமர இலையை தண்ணீரில் ஊறவைத்து பின் அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து வர வீட்டில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடும், அதுமட்டுமில்லாமல் இப்படி ஊறவைத்த தண்ணீரை தெளிக்கும் பொழுது விஷ ஜந்துக்கள் மற்றும் பூச்சிகளை வீட்டினுள் நெருங்கவிடாமல் தடுக்கும்.
"இதன் மூலம் ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றுதான் என்று நிரூபணமாகிறது.நாம் செய்யும் ஒவ்வொரு ஆன்மீக செயலுக்குப் பின்னாலும் ஒரு அறிவியல் ஒளிந்துள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து, இனிவரும் காலங்களில் அவற்றை அழியாமல் பாதுகாத்து நோய் நொடி இல்லாமல் உடல் நலமும் மன நலமும் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம் என்று உறுதிமொழி ஏற்போம்"!

இப்படிக்கு என்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்ட சு. கிஷோர் முதுநிலை வேதியியல்
Comments