சமையல் எரிவாயு சிலிண்டரில் உள்ள வேதிப்பொருள்
- kishor s
- Jul 9, 2022
- 1 min read

நமது வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரில் எந்த வாயு அடைக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களுக்கு எழும். அதற்கான அறிவியல் விளக்கத்தை இந்த பதிவில் காண்போம். சமையல் எரிவாயு சிலிண்டரில் ப்ரோபேன்(propane) மற்றும் பியூட்டேன்(butane) வாயுக்கள் பயன்படுத்தப்படுகிறது.


இந்த வாயுக்கள் வாசனை மற்றும் நிறம் இல்லாதவை. ஆகையால் மெத்தில் மெர்காப்டன்( methyl mercaptan ) என்கிற வாயுவை சிலிண்டரில் கலப்பார்கள் இதனால்தான் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் நமக்கு ஒரு விதமான வாசனை வருகிறது.

இதன் காரணமாகவே நம்மால் பெரும் விபத்தை தவிர்க்க முடிகிறது.
#share this to your friends
Comments