கிரானைட் கற்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு வருகிறதா? அதிர்ச்சி ரிப்போர்ட்
- kishor s
- Aug 6, 2023
- 2 min read
Updated: Apr 1

தற்போதைய சூழலில் நாம் அனைவருக்கும் அழகான வீடு கட்ட வேண்டும் என்கிற கனவு இருக்கும். அப்படி கட்டப்படும் வீடுகள் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க நாம் கிரானைட் கற்களை பயன்படுத்துகிறோம். இப்படி பயன்படுத்தும் கிரானைட் கற்களால் உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய சில கதிர்வீச்சு வருவதாக அமெரிக்கவில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேதியியல் தனிமங்கள் அட்டவணையில் சில தனிமங்கள் கதிர்வீச்சுகளை ஏற்படுத்தக்கூடியவை ஆக அமைகிறது.

நமக்கு உதவும் தனிமங்கள் பெரும்பாலும் பூமிக்கு அடியில் இருந்து கிடைப்பவை. யுரேனியம் (uranium), தோரியம் (thorium) மற்றும் ரேடியம் (radium) போன்ற கதிர்வீச்சுகளை ஏற்படுத்தக்கூடிய தனிமங்களும் பூமிக்கு அடியில் பாறைகளில் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மைதான். இந்த வகையான தனிமங்கள் விலை உயர்ந்தவை என்றாலும், பெரும்பாலும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது.

பூமிக்கு அடியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களில் போதுமான அளவு இந்த கதிர்வீச்சுகளை ஏற்படுத்தக்கூடிய தனிமங்கள் இருப்பதாக ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. பொதுவாக இந்த கதிர்வீச்சை ஏற்படுத்தக் கூடிய தனிமங்கள் பூமிக்கு அடியில் நிலையற்றதாக (unstable compounds) இருக்கும் அது நிலையாக மாறுவதற்காக சில கதிர்வீச்சுகளை உமிழும் பிறகு நிலையான தனிமங்களாக மாற்றமடைகிறது. அந்த வகையில் தான் கிரானைட் கற்களில் யுரேனியம், தோரியம், ரேடியம் மற்றும் இன்னும் சில கதிர்வீச்சுகளை ஏற்படுத்தக் கூடிய தனிமங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி கட்டுரைகளின் படி கிரானைட் கற்களில் இருந்து ரேடான் (radon gas) வாயு உமிழ்வதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த வாயு கார்பன் மோனாக்சைடு போன்ற நிறமற்ற, சுவையற்ற, நறுமணம் அற்ற ஒரு வாயு. இதன் காரணமாகவே இந்த வாயு இருக்கிறதா இல்லையா என்பதை சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மட்டுமே கண்டுபிடிக்க முடியும். எந்த ஒரு சாதனங்களும் இல்லாமல் இந்த வாயுவை கண்டுபிடிப்பது என்பது இயலாத ஒன்று. இந்த வாயு கற்களில் மட்டும் இருந்து வருவதில்லை மாறாக ஆழமான கிணறுகளில் இந்த தனிமங்களை கொண்ட பாறைகள் இருக்கக்கூடும்.

இதன் காரணமாக இருந்தும் தண்ணீர் வழியாக கிணற்றின் மேல் பரப்பில் இந்த ரேடான் வாயு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அப்படி என்ன இந்த ரேடான் வாயுவில் ஆபத்து இருக்கிறது? என்ற கேள்வி உங்களுக்கு வரும். இந்த வாயு வால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர் உலகம் முழுவதும் மூன்றிலிருந்து 14 சதவீதம் பேர் இந்த வாயுவால் பாதிக்கப்படுவதாக முடிவுகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 21 ஆயிரம் பேருக்கு இந்த வாயு காரணமாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட் சொல்கிறது.
தங்களது அழகிய வீடுகளுக்கு கிரானைட் தளத்தை அமைத்தவர்கள் பயப்பட வேண்டாம். இந்த வாயுவால் ஏற்படக்கூடிய பாதிப்பை போக்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. கிரானைட் தளம் உள்ள அறைகளில் காற்றோட்டம் உள்ளவாறு செய்தாலே போதுமானது. பொதுவாக இந்த வாயு காற்றோட்டம் இல்லாத பகுதிகளில் அதிகமாக தங்குவதால் அந்தப் பகுதிகளில் இந்த வாயுவின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
Reference:-
Commentaires